சாலைகள் பெருகினால்தான் பொருளாதாரம் வளர்ச்சி பெறும்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

சென்னை: சாலைகள் பெருகினால்தான் பொருளாதாரம் வளர்ச்சி

சாலைகள் பெருகினால்தான் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைத் துறையில் மூலதன செலவுக்காக மட்டும் 40% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2 வழிச்சாலைகள் 4 வழிசாலைகளாக மாற்றம்

முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ.6,400 கோடியில் 2 வழி சாலைகள் -4 வழி சாலைகளாக மாற்றப்படுகிறது. நெடுஞ்சாலை துறைக்கு மட்டுமே ரூ.16,450 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு. சென்னையில் மழை நீர்தேங்காத சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இன்னுயிர் காப்போம் - பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன

இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம்- 48 திட்டம் மூலம் பல இன்னுயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. சாலை பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கையேடு விநியோகம். அதிக அளவு சாலை விபத்துகள் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு மேம்படுத்த நடவடிக்கை

நெடுஞ்சாலைதுறை பராமரிப்பில் 66,382 கி.மீ சாலைகள்

 66,382 கி.மீ சாலைகள் தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைத்துறை மூலம் பராமரிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 2,000  கி.மீ மாநில ஊராட்சி சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசு மூலம் 139 புறவழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன.  

ரூ.15,626 கோடியில் சென்னை எல்லைச் சாலை திட்டம்

 

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எல்லைச் சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் சென்னை எல்லைச் சாலையை 132.87 கி.மீ.நீளத்துக்கு 6 வழி இரட்டை பாதையாக உருவாக்க உத்தேசம். ரூ.15,626 கோடியில் 6 வழி இரட்டைப் பாதையாக இருபுறமும் இருவழிச் சேவை சாலைகளை உருவாக்க திட்டம். சாலை திட்டத்தின் மூலம் பொதுத்துறை மற்றும் தனியார் வாகனங்களை பயன்படுத்தும் மக்கள் பயன்பெறுவர். சென்னை எல்லை சாலை திட்டத்துக்காக தற்போது வரை ரூ.556 கோடி செலவிடப்பட்டுள்ளது.   

தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் குறைவு

சென்னை: சாலை விபத்துக்கள் குறைவாக நடக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று ஒன்றிய போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின்கட்கரி பாராட்டியுள்ளார். அதிக அளவு சாலை விபத்துகள் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். தமிழ்நாட்டில் சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டதாகவும் கூறினார். மேலும் சாலை அமைக்கும் பணிக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக 1.50 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. திருச்செந்தூரில் புறவழிச்சாலை அமைக்க நிலம் எடுக்கும் பணிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். துறைமுகம்- மதுரவாயல் உயர்மட்ட சாலை அமைக்கும் பணியை இந்த ஆண்டே தொடங்க தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. மழைக்காலங்களில் மலைப்பகுதிகளில் மண் சரிவை தடுக்க நவீன முறையில் நடவடிக்கை. கடந்த 2 ஆண்டுகளில் 10 ரயில்வே மேம்பால பணிகள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளன. ஒரு வழி சாலைகளை இருவழி சாலைகளாக மேம்படுத்த நடவடிக்கை எனவும் தெரிவித்தார். 

Related Stories: