ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்க நடவடிக்கை: அமைச்சர் ஐ. பெரியசாமி பதில்

சென்னை: திருவள்ளூரில் ஜல் ஜீவன் திட்டம் மூலம் குடிநீர் இல்லாத பகுதிகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டு மத்திய அரசானது நாட்டில் உள்ள கிராமங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தை அறிமுகம் செய்தது.

அனைத்து பகுதிகளுக்கும் தேவைக்கு ஏற்ப குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது தமிழக சட்டமன்றத்தில் நடந்து வரும் துறை சார்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், மாதவரம் தொகுதி பரத் நகரில் ஆழ்துளை கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க அரசு முன் வருமா என மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் எழுப்பியுள்ளார்.

இவரின் கேள்விக்கு  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் கூறியதாவது திருவள்ளூர் மாவட்டத்தில் 1069 குடிநீர்த் திட்டப்பணிகள் ரூ.58 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகின்றது. ஜல் ஜீவன் திட்டம் மூலம் 4.15 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிக்கு விரைவில் திட்டம் தயாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Related Stories: