வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை: வர்த்தக சிலிண்டர் விலை ரூ.76 குறைந்தது..!

சென்னை: சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.76 குறைந்து ரூ.2,192க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், காஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில், இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டரின் விலை ரூ.76  குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் வணிக சிலிண்டர் 2,192 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு குறைக்காமல், கடந்த மாத விலையில் நீடிக்கச் செய்திருக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்பட்ட மாற்றத்தினால் காஸ் விலை குறைந்துள்ளது என்று எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: