பெண்ணுக்கு தொல்லை டிரைவர் கைது

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை சண்முகராயன் தெருவைச் சேர்ந்த 27 வயது பெண், தனது குழந்தைகளை கொருக்குப்பேட்டை ஆரணி ரங்கன் தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான சுரேஷ் (42) என்பவரது ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்பி வைப்பது வழக்கம். குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதால் சுரேஷிடம் சம்பந்தப்பட்ட பெண் இயல்பாக பேசி வந்தார். இதை தவறாக எடுத்துக்கொண்ட சுரேஷ், பெண்ணை அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். இதை அவர் கண்டித்துள்ளார்.  மேலும், குழந்தைகளை அழைத்துச்செல்ல வேறு ஆட்டோவை ஏற்பாடு செய்து, அந்த ஆட்டோவில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.

இதனால் அந்த பெண் தனியாக வந்தபோது ஏன் என்னுடன் போனில் பேச மறுக்கிறாய் என்று கூறி, அடிக்கடி அவருக்கு சுரேஷ் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண், கொருக்குப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை நேற்று முன்தினம் கைது செய்தனர்.  விசாரணையில் அவர், சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தவறாக பேசியது தெரியவந்தது. இதனையடுத்து சுரேசை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: