அதிமுக - பாஜ கூட்டணி தொடர்கிறது: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

சென்னை: சட்டப்பேர்வை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டவைகளில் 27 சதவீத அறிவிப்புகள் தான் நிறைவேற்றப்பட்டதாக நிதி அமைச்சர் கூறி இருக்கிறார். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பணிகள் குறித்து வெள்ளை அறிக்கையினை வெளியிட்டார். அதில், மொத்தமாக 2011-12 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரை 1704 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது அதில் 1167 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டதாக நிதி அமைச்சர் தெரிவித்து இருக்கிறார்.

அதில் 491 பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு காரணங்களால் 26 பணிகள் கைவிடப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டது. அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவை 110 விதியின் கீழ் 68 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் அட்சயப் பாத்திரம் என்ற திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 35ஆயிரம் குழந்தைகளுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. முதலில் அந்த திட்டத்தை முதலில் துவக்கி வைத்தது அதிமுக தான். அதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஏழை எளிய குழந்தைகள் பள்ளிக்கு அதிகமாக வர வேண்டும். அவர்களுக்கு சிற்றுண்டி வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த நிதி வழங்கப்பட்டது. ஆளுநருக்கு என சில அதிகாரங்கள் உள்ளது. அந்த வகையிலே சில குறிப்பிட்ட தொகை அனுப்பப்பட்டுள்ளன. அதை உயர்த்தி கொடுத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு கூட இதே அரசாங்கம் ரூபாய் 5 கோடி ருபாய் கொடுத்திருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து அதிமுக, பாஜகவுடன் தான் கூட்டணியில் இருக்கிறது. நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் அதிமுக பாஜவுடன் கூட்டணியில் இருந்தது. அதிமுக- பாஜக கூட்டணி தொடர்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டனியுடன் பயணிப்போம். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் குறித்து இன்னும் பதில் ஏதும் அளிக்கப்படவில்லை.

Related Stories: