இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரில் வர்ணனையாளராக கலந்து கொள்ள போகும் தினேஷ் கார்த்திக்!

சென்னை: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடப்பாண்டில் நடைபெற உள்ள ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக கலந்து கொள்ள போவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான தினேஷ் கார்த்திக் தற்போது ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக்-ன் ஆட்டம் அதிரடியாக இருந்தது.

இவர் தற்போது மிகவும் ஆபத்தான மேட்ச் பினிஷராக உருவெடுத்துள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற தினேஷ் கார்த்திக்-ன் இந்த அதிரடி ஆட்டம் பெரும் துணையாக அமைந்தது.

இவரின் அதிரடி ஆட்டம் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக வாய்ப்பை பெற்றுத்தந்தது. இதையடுத்து இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரிலும் தினேஷ் கார்த்திக் மீண்டும் அதிரடி காட்டுவார் என ஆர்சிபி ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடப்பாண்டில் நடைபெற உள்ள இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக கலந்து கொள்ள போவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: