மியாமி: அமெரிக்காவில் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த கால் இறுதி போட்டியில் 2ம் நிலை வீராங்கனையான பெலாரசின் 24 வயதான அரினா சபலென்கா, 32 வயதான ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியாவுடன் மோதினார். இதில் ஆதிக்கம் செலுத்திய சொரானா சிர்ஸ்டியா 6-4,6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இன்று நள்ளிரவு நடைபெறும் 4வது கால் இறுதி போட்டியில், செக்குடியரசின் பெட்ரா குவிட்டோவா- ரஷ்யாவின் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா மோதுகின்றனர்.