ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி பெயர் தேவையில்லை: ஒன்றிய அரசு

டெல்லி: ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி பெயர் தேவையில்லை என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கடும் எதிர்ப்பை தொடர்ந்து ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தியில் தஹி என்று குறிப்பிட வேண்டும் என்ற உத்தரவை  ஒன்றிய அரசு வாபஸ் பெற்றது. ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி பெயரை பயன்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசின் உணவு தரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு உத்தரவிட்டிருந்தது. தயிர் பாக்கெட்டுகளில் இந்தி பெயர் பிரதானமாக இடம்பெற வேண்டும் என்ற உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழ், ஆங்கிலத்தில் மட்டும் பெயர் இருந்தால் போதுமானது என புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: