மெஸ்ஸி: 100

சர்வதேச கால்பந்து போட்டிகளில் அர்ஜென்டினா அணிக்காக 100 கோல் என்ற சாதனை மைல்கல்லை அந்த அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்ஸி எட்டியுள்ளார். குரகவோ அணியுடன் நடந்த நட்புரீதியிலான போட்டியில் அர்ஜென்டினா அணி 7-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. அந்த போட்டியில் மெஸ்ஸி தனது 7வது சர்வதேச ஹாட்ரிக் சாதனையை (20வது நிமிடம், 33வது மற்றும் 37வது நிமிடம்) பதிவு செய்து அசத்தினார். கோன்சாலஸ் (23’), பெர்னாண்டஸ் (35’), டி மரியா (78’), மான்டியல் (87’) ஆகியோர் தலா ஒரு கோல் போட்டனர். சர்வதேச கோல் வேட்டையில் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (122 கோல்), ஈரானின் அலி டேயி (109 கோல்), மெஸ்ஸி (102 கோல்) முதல் 3 இடங்களில் உள்ளனர்.

Related Stories: