வனத்தில் மின்தடம் அமைக்க கடினமாக உள்ளது: அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது அணைக்கட்டு எம்எல்ஏ  ஏ.பி.நந்தகுமார்(திமுக) பேசுகையில், ‘‘எனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் துணை மின் நிலையம் அமைத்து தர வேண்டும்\\” என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், ‘‘வனத்  துறைக்குச் சொந்தமான இடத்தின் வழியாக மின் கம்பங்கள் அல்லது மின் வயர்கள்  என மின் வழித்தடங்களை அமைக்கின்ற போது வனத் துறை அனுமதியைப் பெறுவது  என்பது சற்று கடினமாக இருக்கிறது. அதனால் திட்டங்களைச்  செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, அதனை கருத்தில்  கொண்டு, விரைவாக, சீரான மின்சாரம் வழங்க துறை அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும்” என்றார்.

Related Stories: