சேலத்தில் நெகிழி பைகள் பயன்பாட்டினை கட்டுப்படுத்த மஞ்சள் பை விற்பனை செய்யும் தானியங்கி இயந்திரம் அறிமுகம்

சேலம்: நெகிழி பைகளை கட்டுப்படுத்தும் விதமாக சேலத்தில் துணியினால் ஆன மஞ்சள் பையினை பொதுமக்கள் பயன்படுத்திடும் வகையில் தானியங்கி மஞ்சள் பை விற்பனை செய்யும் இயந்திரம் கொண்டுவரப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பிளாஸ்டிக்கை ஒழிக்க கொண்டுவரப்பட்டுள்ள இந்த ‘மீண்டும் மஞ்சப்பை’ இயக்கம் தமிழக மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

முதற்கட்டமாக சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மஞ்சள் பை விற்பனை செய்யப்படும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. ரூ.10 செலுத்தி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மஞ்சள் பை பெரும் வகையில் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. நெகிழி பைகள் பயன்பாட்டினை  கட்டுப்படுத்தும் விதமாக கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: