பங்குனி பெருவிழா தொடங்கியது : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்... ஏப்ரல் 4-ல் அறுபத்தி மூவர் வீதியுலா!!

துரைப்பாக்கம்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 3ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில், முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின்போது, கோயிலின் 4 மாட வீதிகளில் உலா வரும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வருவார்கள்.  கொரோனா காரணமாக கடந்த ஆண்டுகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், இந்த ஆண்டு பங்குனி பெருவிழா இன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர, கெட்டிமேள இசை ஒலிக்க பலத்த ஆரவாரத்துடன் பெருவிழா திருக்கொடி ஏற்றப்பட்டது. கூடியிருந்த பக்தர்கள் கொடி மீது மலர்தூவி வணங்கினர். இதையடுத்து கொடியேற்றத்துக்கான மகா தீபாரதனை காட்டப்பட்டது. கூடியிருந்த பக்தர்கள் ‘மயிலையே, கயிலை என்று பக்தி பரசவத்துடன் கோஷமிட்டனர்.

7ம் நாள் தேரோட்டம் நடைபெற உள்ளது.  ஏப்ரல் 4-ல் அறுபத்தி மூவர் வீதியுலா நடைபெறும். ஏப்ரல் 6-ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது. இன்று தொடங்கிஸ்தான நாதஸ்வர வித்வான்களின் மங்கள இசை நிகழ்ச்சியும் நடைபெறும். மேலும், பொதுமக்க 10 நாட்களுக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் ஐந்திருமேனிகள் வீதி உலா, பக்தர்களுக்கு அன்னதானம், ஆள் பாதுகாப்பிற்காக 10 நாட்களுக்கு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேரோட்டம் அன்று கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், திருட்டு போன்ற சம்பவங்கள் நிகழாமல் பாதுகாக்கவும் ஏராளமான போலீசார் குவிக்கப்படுகின்றனர். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், கூடுதல் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.

Related Stories: