அமெரிக்காவில் பள்ளிக்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுக் தள்ளிய பெண்.. 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாப பலி !

வாஷிங்டன் : அமெரிக்காவில் பள்ளிக்குள் புகுந்து அடையாளம் தெரியாத பெண் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். டென்னிஸி மாகாண தலைநகரான nashville-ல் உள்ள தொடக்கப் பள்ளியில் புகுந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கி சத்தம் கேட்டதும் மாணவர்களும் ஆசிரியர்களும் கண்ணீருடன் அலறி அடித்து ஓட்டம் பிடித்த நிலையில், கண்ணில் பட்டவர்கள் அனைவர் மீதும் அந்த பெண் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

சுமார் 15 நிமிடங்கள் நடந்த இந்த அசம்பாவிதத்தில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். குழந்தைகள் தவிர ஊழியர்கள் 3 பேரும் உயிரிழந்ததை nashville காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.  குழந்தைகளை இழந்த பெற்றோர்களுக்கு அதிபர் ஜோபிடன் இரங்கல் தெரிவித்தார். இந்த கோர சம்பவம் தொடர்பாக பேசிய அவர், துப்பாக்கிச் சூடு நடத்தியவரிடம் பயங்கர ஆயுதங்கள், கைத்துப்பாக்கி,2 ஏகே 47 துப்பாக்கி இருந்தன என்பது உங்களுக்கு தெரியும். எனவே, ஆயுதத் தடையை நிறைவேற்றுமாறு எம்பிக்களை மீண்டும் அழைக்கிறேன். நாம் இன்னும் முன்னேறத் தொடங்க வேண்டிய நேரம் இது. குழந்தைகளை இழந்த பெற்றோர்களிடம் எனது இரங்கலையும் அனுதாபத்தையும் கூறிக் கொள்கிறேன்,என்றார்.

துப்பாக்கிச் சூடு நடத்திவரின் அடையாளம் இன்னும் தெளிவாக தெரியவில்லை என்றும் இருப்பினும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 28 வயதுடைய பெண் என்று சந்தேகிப்பதாகவும் அவர் 2 துப்பாக்கிகள் மூலம் சுட்டுக் இருக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய பெண்ணும் தன்னை தானே சுட்டுக் கொண்டு இறந்துவிட்டதாகவும் குறிப்பிட்டனர். 

Related Stories: