ராகுல் காந்தி தகுதிநீக்கம்; மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சியினர் ஆலோசனை கூட்டம்!

டெல்லி: ராகுல் காந்தி தகுதிநீக்கத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்தி வரும் சூழலில் இன்று (27.03.2023) திங்கள்கிழமை காலை 10.30 மணியவில் நாடாளுமன்றத்தில் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு விவகாரம் தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சோனியா காந்தி, திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளார்.

எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் முதல்முறையாக திரிணாமுல் கட்சி எம்.பி.க்களும் பங்கேற்றுள்ளனர். ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து அடுத்தகட்ட போராட்டம் குறித்து எதிர்க்கட்சியினர் விவாதம் செய்யவுள்ளனர். சோனியா காந்தி, திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் முதல்முறையாக திரிணாமுல் கட்சி எம்.பி.க்களும் பங்கேற்றுள்ளனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு உடை அணிந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: