இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: மேலும் 9 பேர் உயிரிழப்பு.! ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,805 பேருக்கு  கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் களமிறங்கியது. கடந்த மார்ச் 22ம் தேதி டெல்லியில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

கொரோனா மேலும் பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,805 கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுவரை இந்தியாவில் 10,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் உ யிரிழந்துள்ளனர்.

Related Stories: