2 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து நாளை மீண்டும் கூடுகிறது தமிழ்நாடு சட்டசபை

சென்னை: தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதற்கு மறுநாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து இந்த பட்ஜெட் மீதான விவாதம் தினமும் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், சனி, ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து தமிழக சட்டசபை நாளை (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. இந்த கூட்டத்தில் 1 மணி நேரம் கேள்வி-பதில் எடுத்துக்கொள்ளப்படும். எம்.எல்.ஏ.க்கள் கேட்கும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். முக்கிய சம்பவங்களை கவன ஈர்ப்பு தீர்மானமாக கொண்டு வந்து எம்.எல்.ஏ.க்கள் பேசுவார்கள். இதற்கும் அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள்.

அதன்பிறகு பட்ஜெட் மீதான 3-ம் நாள் பொது விவாதம் தொடங்கும். தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேசுவார்கள். இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள்  பதில் அளிப்பார்கள்.

Related Stories: