வடமதுரை தபால் நிலையத்தில் ஆதார் சேவை ‘அவுட்’: பொதுமக்கள் சிரமம்

வடமதுரை: வடமதுரை தபால் நிலையத்தில் ஆதார் சேவை பிரிவு முடங்கி கிடப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.வடமதுரை நகரில் அமைந்துள்ளது தபால் நிலையம். இங்கு வடமதுரை நகர் பகுதி தவிர சுற்றியுள்ள போஜனம்பட்டி, காணப்பாடி, மொட்டணம்பட்டி, தும்மலக்குண்டு, கொசவபட்டி, தென்னம்பட்டி, பிலாத்து, மோர்பட்டி, வேல்வார்கோட்டை, சிங்காரக்கோட்டை போன்ற கிராம பகுதிகளை சேர்ந்த

பொதுமக்கள் ஆதார் அட்டையில் திருத்தம், பெயர் சேர்த்தல் செல்போன் எண் சேர்த்தல், முகவரி மாற்றம் போன்ற ஆதார் சம்பந்தப்பட்ட சேவைகளை எளிதில் பெறுவதற்காக ஆதார் சேவை பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.

இப்பகுதி மக்கள் முன்பு நீண்ட தூரத்தில் உள்ள மாவட்ட தலைநகரமான திண்டுக்கல் அல்லது தாலுகாவான வேடசந்தூர் சென்று ஆதார் சேவைகளை பெற்று வந்தனர்.

அதன்பிறகு வடமதுரை தபால் நிலையத்தில் ஆதார் சேவை வழங்கப்பட்டதால் எளிதில் வந்து அதிகளவு மக்கள் பயன்பெற்றனர். இந்நிலையில் வடமதுரை தபால் நிலையத்தில் பல நாட்களாக ஆதார் சேவை மையம் செயல்பாடு இன்றி முடங்கி உள்ளது. இதன் காரணமாக ஆதார் சேவை பெறுவதற்கு மீண்டும் திண்டுக்கல், வேடசந்தூர் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். தற்போது எனவே வடமதுரை தபால் நிலையத்தில் உள்ள ஆதார் சேவை பிரிவை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: