நாங்குநேரி - மேலப்பாளையம் இடையே இரட்டைப் பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம்..!!

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி - மேலப்பாளையம் இடையே அமைக்கப்பட்டுள்ள இரட்டைப் பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. நெல்லை, நாகர்கோவில் ரயில்வே வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பல்வேறு கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் நெல்லை, மேலப்பாளையம், நாங்குநேரி இடையே இரண்டாவது தண்டவாளம் அமைக்கும் பணி முழுமையடைந்துள்ளது. இந்நிலையில் 30 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த பாதையில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலாளர் சச்சிந்திரன் ராஜ்மோகன் தலைமையில் பாதுகாப்பு அலுவலர் ஆனந்த் மற்றும் ரயில்வே தொழில்நுட்ப பாதுகாப்பு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ரயிலில் சென்று ஆய்வில் மேற்கொண்டனர். முன்னதாக நாங்குநேரி ரயில் நிலையத்தில் சோதனை வாகனத்திற்கு ரயில்வே ஊழியர்களால் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அதிவேக சோதனை ஓட்டம் தொடங்கியது. ரயில்வே பாதை அமைந்துள்ள பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.  

Related Stories: