மெஸ்ஸி 800

அர்ஜென்டினா அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி சர்வதேச மற்றும் கிளப் கால்பந்து போட்டிகளில் 800 கோல் என்ற சாதனை மைல்கல்லை எட்டி அசத்தியுள்ளார். உலக கோப்பையை வென்ற பின்னர் விளையாடிய முதல் போட்டியில் பனாமா அணியுடன் மோதிய அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. அந்த போட்டியின் 89வது நிமிடத்தில் கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பில் மெஸ்ஸி அபாரமாக அடித்த கோல் அவரது 800வது கோலாக அமைந்தது. போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பிறகு இந்த சாதனையை நிகழ்த்தும் 2வது வீரர் என்ற பெருமை மெஸ்ஸிக்கு கிடைத்துள்ளது. அவர் தாய்நாட்டு அணிக்காக 99, பார்சிலோனா அணி சார்பில் 672 மற்றும் பிஸ்ஜி அணிக்காக 29 கோல் அடித்துள்ளார்.

Related Stories: