வாரியர்சுக்கு 183 ரன் இலக்கு

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான மகளிர் பிரிமியர் லீக் எலிமினேட்டர் ஆட்டத்தில், யுபி வாரியர்ஸ் அணிக்கு 183 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசியது. யஸ்டிகா பாட்டியா, ஹேலி மேத்யூஸ் இணைந்து மும்பை இந்தியன்ஸ் இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 31 ரன் சேர்த்தது. யஸ்டிகா 21 ரன், ஹேலி மேத்யூஸ் 26 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 14 ரன்னில் வெளியேறினார்.

அதிரடியாக விளையாடிய ஸைவர் பிரன்ட் 26 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். பிரன்ட் - அமெலியா கெர் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்தது. அமெலியா 29 ரன் விளாசி அவுட்டானார். மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. சைவர் பிரன்ட் 72 ரன் (38 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்), பூஜா வஸ்த்ராகர் 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை அணிக்கு கடைசி 5 ஓவரில் மட்டும் 66 ரன் கிடைத்தது. வாரியர்ஸ் பந்துவீச்சில் சோபி 2, அஞ்சலி, பார்ஷவி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 20 ஓவரில் 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் யுபி வாரியர்ஸ் அணி களமிறங்கியது.

Related Stories: