சில்லி பாயின்ட்...

* போபாலில் நடந்து வரும் ஐஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் ருத்ராங்க்‌ஷ் பாலாசாகேப் (19 வயது) 2வது வெண்கலப் பதக்கம் வென்றார். ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் நேற்று களமிறங்கிய அவர் 262.3 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்தார். சீனாவின் ஷெங் லிஹாவோ தங்கப் பதக்கமும், டு லின்ஷு வெள்ளிப் பதக்கமும் பெற்றனர். இந்தியா 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

* ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் (38 வயது) முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Related Stories: