3வது சுற்றில் படோசா: மயாமி ஓபன் டென்னிஸ்

மயாமி: அமெரிக்காவில் நடக்கும் மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா தகுதி பெற்றார். 2வது சுற்றில் ஜெர்மனியின் லாரா சீஜ்மண்டுடன் (35 வயது, 22வது ரேங்க்) மோதிய படோசா (25 வயது, 29வது ரேங்க்), டை பிரேக்கர் வரை நீடித்த முதல் செட்டை 7-6 (7-2) என கடுமையாகப் போராடி வென்று முன்னிலை பெற்றார். 2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த லாரா 6-4 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. 3வது மற்றும் கடைசி செட்டில் அதிரடியாக விளையாடி லாராவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த படோசா 7-6 (7-2), 4-6, 6-2 என்ற கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 2 மணி, 51 நிமிடத்துக்கு நீடித்தது.

மற்றொரு 2வது சுற்றில் களமிறங்கிய கஜகஸ்தான் வீராங்கனை எலனா ரைபாகினா 7-5, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் அன்னா கலின்ஸ்கயாவை போராடி வென்றார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 15 நிமிடத்துக்கு நடந்தது. முன்னணி வீராங்கனைகள் விக்டோரியா அசரெங்கா (பெலாரஸ்), மார்டின டிரெவிசான் (இத்தாலி), மாக்தா லினெட் (போலந்து), கோகோ காஃப், டேனியலி கோலின்ஸ், ஜெஸிகா பெகுலா, கிளேர் லியு (அமெரிக்கா), யெலனா ஓஸ்டபென்கோ (லாத்வியா), லியுட்மிலா சாம்சனோவா, அனஸ்டேசியா போடபோவா (ரஷ்யா), பெத்ரா மார்டிச் (குரோஷியா), எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்) ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

Related Stories: