ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னை: 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து மக்களவை எம்.பி பதவியிலிருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்த்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி மீதான தகுதிநீக்க நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ராகுல் காந்தி மீதான நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமைப் பயணம் மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும் தகுதி நீக்கத்திற்கு ஒரு காரணம் என்று முதல்வர மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து இதனை எதிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்த தகுதி நிக்க நடவடிக்கைகளின் மூலமாக ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதியை பாஜக இழந்துவிட்டது. ராகுல் காந்தியை பார்த்து பாஜக தலைமை பயந்து இருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. 2 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்திவிடவில்லை. மேல்முறையீடு செய்வது என்பது அடிப்படை உரிமை அதற்குள் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்வது எம்.பி.யின் ஜனநாயக உரிமையை பறிப்பதாகும் என்று முதலவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினருக்குக்கூட கருத்து சொல்லும் ஜனநாயக உரிமை கிடையாது என்று மிரட்டும் தொனியில் நடவடிக்கை எடுத்துள்ளனர். மீண்டும் ராகுலை நாடாளுமன்றத்துக்குள் அனுமதித்தால் தங்களது அரசியலுக்கு நெருக்கடி என அஞ்சியே தகுதிநீக்கம் செய்துள்ளனர். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி வாய்த்த குற்றசாட்டுகளுக்கு சரியான பதிலை ஒன்றிய அரசில் இதுவரை யாரும் சொல்லவில்லை. 

குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் கேள்வி கேட்டவரை அப்புறப்படுத்துவது ஒன்றிய அரசுக்கு அழகல்ல என்று முதல்வர் கூறியுள்ளார். மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பு; ஐகோர்ட்டில் மேல்முறையீடு இருக்கிறது இறுதித்தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில்தான் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்காகவே காத்திருந்ததைப் போல 23-ம் தேதி தீர்ப்பு , 24-ம் தேதி பதவி பறிப்பு என்று நடவடிக்கையை பாஜக அரசு எடுத்துள்ளது.  

Related Stories: