அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து ராகுல்காந்தி நீக்கம் செய்யப்பட்டதுக்கு அமைச்சர் உதயநிதி கண்டனம்

சென்னை: 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து மக்களவை எம்.பி பதவியிலிருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்த்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது கர்நாடக மாநிலம், கோலாரில் நடந்த தேர்தல் பிரசார பேரணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார். அந்த கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, அனைத்து திருடர்களும் எப்படி மோடி என்ற குடும்ப பெயரை வைத்துள்ளனர் என்று பேசியுள்ளார்.

ராகுலின் இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜவினர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதனிடையே பாஜ எம்எல்ஏ குஜராத் முன்னாள் அமைச்சர் நீதிமன்றத்தில் ராகுலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.சூரத் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த 17-ம் தேதி முடிவடைந்தது. வழக்கின் தீர்ப்பை 23-ம் தேதி அறிவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதற்காக ராகுல்காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி அவதூறு வழக்கில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு எண் 499 மற்றும் 500-ன் கீழ் ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்ததோடு அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

எம்.பி பதவியில் இருந்து. 2019 தேர்தல் பேச்சுக்காக ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடுத்த பாஜக எம்.எல்.ஏ ஒருவரால் இது தூண்டப்பட்டது. இத்தகைய மிரட்டல்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் போராடுவதைத் தடுக்காது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.தேர்தல் பேச்சு தொடர்பாக பாஜகவினர் தொடர்ந்த அவதூறு வழக்கில், காங்கிரஸின் ராகுல்காந்தியை 2 ஆண்டுகள் சிறையென தீர்ப்பு வந்ததும்,அவரை எம்.பி பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ள ஒன்றிய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பாசிஸ்ட்டுகளை அச்சமூட்டியுள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories: