எத்தனை சதி செய்தாலும் ராகுல் காந்தி போராட்டத்தை தொடர்வார்; தொடர்ந்து சண்டை செய்வோம்: காங்கிரஸ் ட்வீட்

டெல்லி: தொடர்ந்து சண்டை செய்வோம் என காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. பிரதமரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டது. மார்ச் 23-ம் தேதி முதல் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலர் உத்பால் குமார் சிங் அறிவித்துள்ளார். தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட நிபுணர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்; ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டடுவிட்டது. இந்த நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் வீதி முதல் நாடாளுமன்றம் வரை தொடர்ந்து போராடி வருகிறார்: ஜனநாயகத்தை காப்பாற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறார். ஜனநாயகத்தை காப்பாற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்; இச்சதி வேலைகளுக்கு மத்தியிலும், அவர் தொடர்ந்து போராடுவார். தொடர்ந்து சண்டை செய்வோம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: