தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஈரோடு, சேலம் நாமக்கல், மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர். திருச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.  

தமிழ்நாட்டில் கோடைகாலம் துவங்குவதற்கு முன்பு வெயில் பல மாவட்டங்களில் சுட்டெரிக்க தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் அவ்வப்போது சில மாவட்டங்களில் வெளியிலும், மழையும் காலநிலை மாறி மாறி வருகிறது. காலையில் பல மாவட்டங்களில் வெளியிலின் தாக்கம் அதிகமாவும் மாலையில் பணி மற்றும் இரவில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தென்  இந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டலத்தின் வளிமண்டல கிழடுக்கு திசை காற்றும் மேலடுக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்வதற்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

Related Stories: