உடன்குடி பணியாளர் தற்கொலை சம்பவத்தில் வழக்கு பதிவு, விஷவாயு தாக்கி உயிரிழப்பது தடுக்கப்படும்: சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு!

சென்னை: சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் கடம்பூர் ராஜூ (அதிமுக), செல்வபெருந்தகை (காங்கிரஸ்), எஸ்.எஸ்‌.பாலாஜி (விசிக), வேல்முருகன் (தவாக) ஆகியோர் உடன்குடி தூய்மை பணியாளர் தற்கொலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:

மாவட்ட ஆட்சித் தலைவர் நேரடியாக சென்று பணியாளரை பார்த்து மருத்துவர்களுக்கு அறிவுரை சொல்லி நல்ல முறையில் சிகிச்சை தர வேண்டுமென அறிவுறுத்தினார்.

இதற்கிடையில் தூய்மை பணியாளர்கள் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அவர்களிடையே சமாதானம் செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சொன்னார். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தூய்மை பணியாளர் சுடலை மாடன் இறந்துவிட்டார்.  உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் சென்று சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மேற்பார்வையாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. நிவாரணமாக ரூ.6 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் இதுபோல நடக்காமல் இருப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாநகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள்கழிவுநீரை சுத்தம் செய்வதற்கு அப்பகுதியில் உள்ள அதிகாரிகளுக்கு சொல்லாமல், அவர்களாகவே ஆட்களை குழிக்குள் இறக்குவதால் தான் விஷவாயு தாக்கி இறக்கின்றார்கள்.

இப்போது கழிவுநீரை எடுப்பதற்கு கூட அனுமதி பெற்று தான் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற முறையை கொண்டு வந்துள்ளோம். பெரிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.  இதுபோல தூய்மை பணியாளர்கள் அவர்களின் குடும்பத்தில் யாராவது பணியின்போது இறந்திருந்தால் அவர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்குவதற்காக பணிகளும் நடைமுறையில் வரயிருக்கிறது. எதுவாக இருந்தாலும் இனிமேல் விஷவாயு தாக்கி உயிரிழப்பு ஏற்படாமல் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: