இலங்கை சிறையில் உள்ள புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை விடுவிக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு..!!

கொழும்பு: இலங்கை சிறையில் உள்ள புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை விடுவிக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுவித்த நிலையில் 4 மீனவர்களும் விரைவில் தாயகம் வருகின்றனர். மீனவர்கள் கைதின்போது பறிமுதல் செய்யப்பட்ட பல லட்சம் மதிப்புடைய படகு இலங்கையில் அரசுடைமையாக்கப்பட்டது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் 4 பேர் கடந்த 12ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். தொடர்ச்சியாக தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை கண்டித்து பல்வேறு தரப்பிலும் குரல்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு மீனவர்கள் யாரும் பாதிக்கப்படக்கூடாது. சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை உடனே விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், இலங்கை சிறையில் இருக்கும் புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை நிபந்தனையுடன் விடுவிக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: