இந்திய தூதரக தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும்: இங்கி. வெளியுறவு அமைச்சர் பேச்சு

லண்டன்: லண்டனில் இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இங்கிலாந்து அரசு வலுவான பதிலடி கொடுக்கும் என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலானது. இதற்கு கண்டனம் தெரிவித்த, வெளியுறவு அமைச்சகம், இது குறித்து விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது. இதற்கு பதில் அளிக்கும் வகையில், டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம், தூதரின் இல்லம் முன் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புகள் அகற்றப்பட்டது. இந்நிலையில், இது குறித்து பேசிய இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி, ``இந்திய தூதரகத்தின் மீதான தாக்குதல் ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்த விவகாரத்தை அரசு மிகவும் தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது. இது போன்ற வன்முறைகளுக்கு இனிமேல் வலுவான பதிலடி கொடுக்கப்படும்,’’ என்று தெரிவித்தார்.

Related Stories: