சிந்து, பிரணாய் முன்னேற்றம்: சுவிஸ் ஓபன் பேட்மின்டன்

செயின்ட் ஜேக்கப்ஷேல்: சுவிஸ் ஓபன் சூப்பர் 300 பேட்மின்டன் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட, இந்திய நட்சத்திரங்கள் பி.வி.சிந்து, எச்.எஸ்.பிரணாய் தகுதி பெற்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் உள்ளூர் வீராங்கனை ஜென்ஜிரா ஸ்டேடல்மான் உடன் நேற்று மோதினார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த சிந்து 21-9, 21-16 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். அடுத்ததாக அவர் இந்தோனேசியாவின் புத்ரி குசுமா வர்தானியுடன் மோதுகிறார். ஆண்கள் ஒற்ரையர் பிரிவில் களமிறங்கிய எச்.எஸ்.பிரணாய் 21-17, 19-21, 21-17 என்ற செட் கணக்கில் சீனாவின் ஷி யு கியை வீழ்த்தினார். பிரணாய் அடுத்த சுற்றில் பிரான்ஸ் வீரர் கிறிஸ்டோ பாபோவ் சவாலை சந்திக்கிறார்.

Related Stories: