இந்திய ராணுவ வீரர்கள், டெல்லி அரசு ஊழியர்கள், கோடீஸ்வரர்கள் உள்பட 16.8 கோடி பேரின் தகவல்களை திருடியதாக 9 பேர் கைது

ஐதராபாத்: இந்திய ராணுவ வீரர்கள், டெல்லி அரசு ஊழியர்கள், கோடீஸ்வரர்கள் உள்பட 16.8 கோடி பேரின் தகவல்களை திருடியதாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் மிகப்பெரிய 6 வங்கிகள் உள்பட பல வங்கிகளின் இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய 9 பேர் கும்பல் தகவல்களை திருடியுள்ளது. பல கோடி பேரின் தகவல்களை திருடிய பேரும் டெல்லி மற்றும் புனேவை சேர்ந்தவர்கள் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

 அவர்கள் தனிநபர்களின் தகவல்கள் மட்டுமல்லாமல், அரசின் ரகசியத் தகவல்களையும் திருடியதாக கூறப்படுகிறது. இணையதளங்களில் ஊடுருவி தகவல்களை திருடிய 9 பேர் கும்பலை ஐதராபாத்தை சேர்ந்த சைபராபாத் போலீசார் கைது செய்தனர். நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தனிநபர் தகவல் திருட்டு மோசடி இதுவாகும்.

வங்கி வாடிக்கையாளர்கள் 1.1 கோடி பேர், முகநூலை பயன்படுத்தும் 75 லட்சம் பேர், . 1.2 கோடி வாட்ஸ் ஆப் பயனாளர்கள், டெல்லி அரசின் 35,000 அதிகாரிகள், மற்றும் ஊழியர்களின் தகவல்களும் திருடப்பட்டுள்ளது. மேலும் கிரெடிட் கார்டுகளுக்காக விண்ணப்பித்தவர்கள் பற்றிய தகவல்களையும் 9  பேர் கும்பல் திருடி விற்பனை செய்துள்ளது.

மேலும் ராணுவத்தில் பணிபுரியும் 2.5 லட்சம் வீரர்கள் பற்றிய தகவல்களும் திருடப்பட்டுள்ளது. இந்த தகவல் திருட்டுக்கு ராணுவத்தில் பணிபுரியும் சிலர், டெல்லி அரசு ஊழியர்கள் சோழர் உதவினார்களா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வாடிக்கையாளர் பெயர்கள், பணி விபரம், ஆதார் எண் விபரங்கள், பான் கார்டு விபரங்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விபரங்கள் திருடப்பட்டுள்ளது. மொத்தத்தில் பல்வேறு தரப்பட்ட மக்கள் பற்றிய விபரங்களை ரூ.140 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர்.

Related Stories: