சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை எப்போது?.. ஒன்றிய அரசு பதில்

2026-ம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்படலாம் என்று ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ளது.

நாட்டில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்படுவது வழக்கம். அந்த அடிப்படையில், 2008-ம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத்தில் உள்ள தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டன. 2008-ம் ஆண்டு தொகுதிகள் மறுவரையறை செய்யும் போது பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்தும், தொகுதிகளை மறுவரையறை செய்யும் போது மாநிலங்களுக்கான பங்கு என்ன என்றும், அடுத்த தொகுதி மறுவரையறை எப்போது செய்யப்படும் என்றும் பாரதிய ஜனதா கட்சியை சேந்த ஜி.வி.நரசிம்ம ராவ் என்பவர் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த கேள்விக்கு மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக பதிலளித்து ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரி.ஜி.ஜூ: தொகுதிகள் மறுவரையறையில் மாநிலங்களுக்கு எந்த விதமான பங்கும் இல்லை என தெரிவித்துள்ளார். அடுத்த மறுவரையறை 2026-ம் ஆண்டுக்கு பின்னர் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படலாம் என சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: