ஐபிஎல் கோப்பை ஆர்சிபி அணிக்குதான்: ஸ்ரீசாந்த் சொல்கிறார்

மும்பை: ஐபிஎல் போட்டிகளில் வீரராக இல்லாமல் ஒரு வர்ணணையாளராக (காமன்டேட்டராக) இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் களமிறங்க உள்ளார். ஐபிஎல் தொடருக்கான நட்சத்திர வர்ணணையாளர்கள் பட்டியலில் ஸ்ரீசாந்த் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் ஸ்ரீசாந்த் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் போட்டிக்கு திரும்புவது மிகவும் உற்சாகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ``இந்த முறை ஐபிஎல் கோப்பையை டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்லாது. விராட் கோஹ்லி அங்கம் வகிக்கும் ஆர்சிபி அணிக்குதான் கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து ஆகும். கேரள மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் கேப்டனாக இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எனது ஆதரவு இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: