ஒருநாள் விடுமுறைக்கு பின் கூடியது சட்டப்பேரவை; மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல்.. ஆணவ கொலை குறித்து ஈபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்..!!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தின் இன்றைய அலுவல்கள் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியுள்ளன. ஒருநாள் விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது.

இரங்கல் தீர்மானம்:

முன்னாள் எம்.எல்.ஏக்கள் ப.தங்கமுத்து, த.மாரிமுத்து, உபயதுல்லா, கு.சீனிவாசன் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கும் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

ஆணவ கொலை; ஈபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த ஜெகன் ஆணவ கொலை செய்யப்பட்டது தொடர்பாக பேரவையில் ஈபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் கொண்டு வந்த தீர்மானத்துக்கு முதல்வர் நாளை பதிலளிப்பார் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

காஞ்சிபுரம் வெடி விபத்து: காங். கவன ஈர்ப்பு தீர்மானம்

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தது குறித்து பேரவையில் காங்கிரஸ் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. சுந்தரும் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories: