பதக்கம் உறுதி

டெல்லியில் நடந்து வரும் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனைகள் அண்ணாமலையார் கோ (48 கி.), ஸவீத்தி பூரா (81 கி.) இருவரும் பதக்கம் வெல்வதை உறுதி செய்து அசத்தினர். காலிறுதியில் நீத்துவின் அதிரடி தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஜப்பான் வீராங்கனை மடோகா வாடா திணறியதை அடுத்து போட்டியை நிறுத்திய நடுவர், நீத்து வென்றதாக அறிவித்தார். சவீத்தி தனது காலிறுதியில் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா கெபிகவாவை வீழ்த்தினார். இருவரும் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலமாக இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் உறுதியாகி உள்ளன. சாக்‌ஷி சவுதாரி (52 கி.), மணிஷா மவுன் (57 கி.) காலிறுதியில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினர்.

Related Stories: