போபாலில் நடக்கும் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், இந்திய வீரர் சரப்ஜோத் சிங் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அஜர்பைஜானின் ருஸ்லன் லுனெவுடன் மோதிய அவர் 16-0 என்ற புள்ளிக்கணக்கில் அபாரமாக வென்று முதலிடம் பிடித்தார். ருஸ்லன் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தியடைந்தார். இதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரர் வருண் தோமர் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார். பதக்கங்களுடன் மூவரும் உற்சாகமாக போஸ் கொடுக்கின்றனர்.