சில்லி பாயின்ட்...

* இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் அக்டோபர் 5- நவம்பர் 19 வரை நடைபெற உள்ளதாக பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. இறுதிப் போட்டி அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும். மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 46 நாட்களில் 48 போட்டிகள் நடக்க உள்ளன.

* ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய வேகம் முகமது சிராஜ் தற்போது 3வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசல்வுட், நியூசிலாந்தின் டிரென்ட் போல்ட் முதல் 2 இடங்களில் உள்ளனர்.

* ஐபிஎல் டி20 தொடரில், டாஸ் போட்ட பிறகு அதன் முடிவுக்கு ஏற்ப இரு அணி கேப்டன்களும் தங்கள் அணிகளுக்காகக் களமிறங்கும் 11 வீரர்கள் அடங்கிய பட்டியலை அறிவிக்கலாம் என்ற புதிய விதி அறிமுகமாகிறது.

* மகளிர் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி நேரடியாகத் தகுதி பெற்ற நிலையில், நாளை நடக்கும் எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - யுபி வாரியர்ஸ் மோதுகின்றன. அதில் ஜெயிக்கும் அணி 26ம் தேதி டெல்லி அணியுடன் பைனலில் மோதும்.

Related Stories: