ஷ்ரேயாஸ் அய்யருக்கு அறுவை சிகிச்சை

முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் அய்யருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, எதிர்வரும் ஐபிஎல் டி20 தொடர் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவர் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது. அவர் 4-5 மாதங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டியிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பன்ட், பும்ரா ஆகியோர் காயம் காரணமாக விளையாட முடியாத நிலையில், ஷ்ரேயாஸ் அய்யரும் ஓய்வெடுக்க வேண்டியிருப்பது இந்திய அணிக்கு பின்னடைவை கொடுத்துள்ளது.

Related Stories: