இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 270 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி!

சென்னை: இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 270 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 269 ரன்களை எடுத்தது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்த்ஹிய அணி கைப்பற்றிய நிலையில் 3 போட்டிகள் ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் 3வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 269 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 47 ரன்களும், ட்ரேவில் ஹெட் 33 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் பாண்டியா மற்றும் குலதீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அக்சர் பட்டேல் மற்றும் சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

Related Stories: