ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதா நாளை மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டலின்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதா நாளை மீண்டும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். மசோதா தொடர்பாக ஆளுநர் எழுப்பிய கேள்விகள், அரசின் விளக்கங்களையும் பேரவையில் விளக்க திட்டமிடப்பட்டுள்ளது.  

ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை கடை செய்த்தவதற்கான சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அந்த சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இல்லை என கூறி ஆளுநர் சட்டமசோதாவை திருப்பி அனுப்பிஇருந்தார். இந்த நிலையில், சட்டப்பேரவையில் மீண்டும் சட்டப்பேரவையில் மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என தகவல் வெளியாகியிருந்தது.

 இந்நிலையில் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி 2 அறிக்கைகளும் தக்கல்ஸ் செய்யப்பட்ட நிலையில், நாளையில் இருந்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதம் தொடங்கவுள்ள நிலையில், முதல் நாளிலேயே ஆன்லைன் ரம்மி தொடர்பான தடை சட்ட மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் கொண்டுவரப்படவுள்ளது. அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: