ஆத்தூர் பகுதியில் அறுவடைக்கு தயாரான நெல்மணிகள்

நிலக்கோட்டை : ஆத்தூர்,சித்தையன்கோட்டை பகுதியில் நெல்மணிகள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.சின்னாளப்பட்டியை அடுத்த ஆத்தூர், சித்தையன்கோட்டை பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதி என்பதால் காமராஜர் நீர்த்தேக்கம் மற்றும் ராஜா வாய்க்கால் பாசன மூலம் 5,000 மேற்பட்ட ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

மழை காலத்தை தொடர்ந்து சம்பா,தாலடி பருவத்தில் வேளாண்மை துறையினர் சார்பில் பறிந்துள்ள கோ-51, என்எல்ஆர் மற்றும் நீண்டகாலப் பயிரானாலும் அதிக மகசூல் தரக்கூடிய அக்க்ஷயா உள்ளிட்ட ஒட்டு ரகங்களை மிக அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் அறுவடை காலத்தில் கோடை மழைக்கு பயந்து அறுவடை செய்வார்கள். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தைவிட கோடை மழை துவங்குவதற்கு முன்பாகவே தற்போது அரசு நெல் கொள்முதல் நிலையம் துவக்கி பணிகள் நடைபெறுவதால் விவசாயிகள் எந்த பயமும் இன்றி அறுவடை செய்து வருகின்றனர். அதற்காக நெல்மணிகள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.

Related Stories: