அரசுக்கு ரூ.30 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் மீது 6 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

ஈரோடு: அரசுக்கு ரூ.30 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் மீது 6 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. பல்லாவரம் நகராட்சி ஆணையராக இருந்த போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும்  கூறப்படுகிறது. 11 பள்ளிகளில் கழிவறை சுத்தம் செய்ய ஒப்பந்தம் வழங்கியதில் அரசுக்கு ரூ.6.85 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதற்கு முன்னர் திருப்பூர் மாநகராட்சி ஆணையர், பல்லவபுரம் நகராட்சி ஆணையராகவும் இவர் பணியாற்றினார். பல்லவரபும் நகராட்சி ஆணையராக சிவக்குமார் பணிபுரிந்த போது அவர் மீது ஏராளமான ஊழல் முறைகேடு, லஞ்ச புகார்கள் அரசுக்கு சென்றன. இது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு நிலுவையில் இருந்து வந்தன. அத்துடன் மேல்நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

பின்னர் பதவி உயர்வு அடிப்படையில் திருப்பூர் மாநகராட்சி ஆணையராக சிவக்குமார் மாற்றப்பட்டார். இதையடுத்து ஈரோடு மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டார்.அண்மையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஈரோடு மாநகராட்சி ஆணையர் என்ற அடிப்படையில் ஈரோடு கிழக்கு தொகுதி அதிகாரியாகவும் செயல்பட்டார் சிவக்குமார்.இந்நிலையில் பல்லவபுரம் நகராட்சியில் பணியாற்றிய காலத்தில் குவிந்த புகார்களைத் தொடர்ந்து சிவக்குமார் மீது 6 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: