இந்தியாவில் மீண்டும் ஆயிரத்தை தொட்ட கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் இல்லாதா அளவிற்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் விகிதம் 0.7%-ல் இருந்து 1.09% ஆக அதிகரித்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த மார்ச் 14-ம் தேதி 402-ஆக இருந்த கொரோனா பாதிப்பு, மார்ச் 16 -ம் தேதி 754 ஆக உயர்ந்தது. மார்ச் 18-ம் தேதி  796 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி, 7,026 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: