ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம்: செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை..!

சென்னை: சிகிச்சையில் உள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா உயிரிழந்ததையடுத்து அந்த சட்டமன்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சி, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இதனிடையே கடந்த 15ம் தேதி இரவு திடீரென ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

உடனடியாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதய பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. சிகிச்சையில் இருந்த அவருக்கு லேசான கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், இதயத்தில் ரத்த நாளங்கள் சுருங்கியிருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது. இந்நிலையில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது.

XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதி அடைந்ததாகவும், ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை சமநிலைப்படுத்த செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இளங்கோவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

Related Stories: