சூர்யகுமார் யாதவ் பயிற்சியாளருடன் ஆலோசிக்க வேண்டும்: கவாஸ்கர் பேட்டி

முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் அளித்த பேட்டி: சூர்யகுமார் யாதவ் 50 ஓவர் கிரிக்கெட்டிற்கு சரிவரமாட்டார் என்பது உண்மை அல்ல. அவரிடம் சில டெக்னிக் பிரச்சினைகள் உள்ளன. அதனை சரிசெய்தாலே சிறப்பான ஃபார்முக்கு வருவார். அவர் 3 ஸ்டம்புகளையும் காட்டிக்கொண்டு ஓப்பனாக நிற்கிறார். இது டி20 கிரிக்கெட்டிற்கு இருக்க வேண்டிய முறை. ஆனால் ஒருநாள் போட்டிக்கு அது சரிவராது.

காரணம் என்ன டி20 கிரிக்கெட்டில் ஓபன் ஸ்டான்ஸில் இருக்கும்போது பிட்சாகி வரும் பந்தினை ஃப்ளிக் ஷாட் மூலம் சிக்சருக்கு விரட்ட முடியும். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் பந்து ஸ்ட்ரைட்டாக வராது. திடீரென பந்து உள்பக்கமாக திரும்பிவிட்டால், எதையும் செய்ய முடியாமல் அவுட்டாகி செல்ல வேண்டியது தான். எனவே பேட்டிங் பயிற்சியாளருடன் சூர்யகுமார் யாதவ் ஆலோசனை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.

Related Stories: