செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட பாஜக பெண் நிர்வாகிகள் கூண்டோடு அதிமுகவில் இணைந்தனர். பாஜகவில் உழைக்கும் மகளிர் நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை என்பதால் அதிமுகவில் இணைந்ததாக விளக்கம் அளித்துள்ளனர். பீர்க்கன்கரணையில் பா.ஜ.க. பெண் நிர்வாகிகள் 100 பேர், அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். செங்கல்பட்டு மாவட்ட பாஜக துணைத் தலைவர் கங்காதேவி சங்கர் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். அதிமுகவில் இணைவோரை துரோகி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பதா என்று பெண் நிர்வாகிகள் ஆவேசமாக தெரிவித்தனர்.