2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது, பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார். இதை தொடர்ந்து, 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது . காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் கூடியதும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2021 மே மாதம் திமுக ஆட்சி பதவியேற்றது முதல் தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 3வது வேளாண்மை பட்ஜெட் ஆகும். முன்னதாக கலைஞர் நினைவிடத்தில் நிதிநிலை அறிக்கையை வைத்து மரியாதை செலுத்தினார், அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்!

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண்மை பட்ஜெட்டில், அங்கக வேளாண்மை கொள்கையில் வெளியிட்ட புதிய அம்சங்கள் நிறைவேற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியிட வாய்ப்புள்ளது. மேலும், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது போன்று கரும்பு விவசாயிகள், விவசாயிகளுக்கு பல்வேறு புதிய சலுகைகள் இன்றைய பட்ஜெட்டில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இது, விவசாயிகளிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: