கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் தலைகீழாக தரையில் விழுந்து தீப்பிடித்தது .. 4 பேர் உயிரிழப்பு!!

கொலம்பியா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக தரையில் விழுந்த காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ராணுவத்திற்கு சொந்தமான UH1N ரக ஹெலிகாப்டர் குயிப்டோ என்ற பகுதியில் இருந்து ஆல்டோ நகருக்கு சென்றுக் கொண்டு இருந்தது. அப்போது நடுவானில் கட்டுப்பாட்டை இழந்த அந்த ஹெலிகாப்டர் குயிப்டோ நகரில் தலைகீழாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து பணிகளை தொடங்கினர். அப்போது உடல் கருகி இருந்த ராணுவ வீரர்களளின் சடலங்களை மீட்டனர்.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த வீரர்கள் 4 பேர் உயிரிழந்த நிலையில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பலியானவர்கள்  ஜூலியத் கார்சியா, ஜோஹன் ஓரோஸ்கோ, ஹெக்டர் ஜெரெஸ், ரூபன் வெகுய்சாமோன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் ஜூலியத் கார்சியா என்பவர் விமான பயிற்சியை முடித்த முதல் பெண் ராணுவ அதிகாரி என்றும் கொலம்பியா அரசு தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டர் விழுந்த காரணம் இன்னும் அறியப்படாததால், கொலம்பியாவின் தேசிய ராணுவம் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: