திருமண நிதிக்கு லஞ்சம் பெண் அலுவலர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மரிய சுபைதா தனது மகளுக்கு திருமண நிதியுதவி ரூ.50,000 மற்றும் தாலிக்கு தங்கம் வாங்க வந்துள்ளார். அவரிடம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சமூக நல விரிவாக்க அலுவலர் பிரேமா (50), இதற்காக ரூ.4,000 லஞ்சம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுரையின்படி நேற்று மாலை மரியசுபைதா, பிரேமாவை சந்தித்து ரூ.4,000 கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் பிரேமாவை கைது செய்தனர்.

Related Stories: