ஒன்றிய அரசின் மொத்தத் கடன் தொகை சுமார் ரூ.155.8 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது: மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சர் தகவல்

டெல்லி: மார்ச் 31, 2023 நிலவரப்படி, ஒன்றிய அரசின் மொத்தத் கடன் தொகை சுமார் ரூ.155.8 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 57.3% என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

ஏடிஎம் இயந்திரங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளை நிரப்புவது குறித்து வங்கிகளுக்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை. கடந்தகால பயன்பாடு, நுகர்வோர் தேவை, பருவகால போக்கு போன்றவற்றின் அடிப்படையில் ஏடிஎம்களுக்கான தொகை மற்றும் மதிப்பின் தேவையை வங்கிகள் தாங்களாகவே மதிப்பீடு செய்கின்றன, என்று அவர் கூறினார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஆண்டு அறிக்கையின்படி, 2017 மார்ச் இறுதியிலும், 2022 மார்ச் இறுதியிலும் புழக்கத்தில் இருந்த ரூ.500 நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.9.512 லட்சம் கோடி ஆகும். ரூ.2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு மற்றும் ரூ.27.057 லட்சம். கோடியாக உள்ளது என மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மார்ச் 31, 2023 நிலவரப்படி, மத்திய அரசின் கடன்/பொறுப்புகளின் மொத்தத் தொகை சுமார் ரூ.155.8 லட்சம் கோடி எனவும், இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 57.3% என்றும் ஒன்றிய நிதியமைச்சர் கூறினார். இதில், தற்போதைய மாற்று விகிதத்தில் வெளிக் கடன் மதிப்பு ரூ.7.03 லட்சம் கோடி (GDPயில் 2.6%) என அவர் தெரிவித்தார்.

Related Stories: